News

  • Home
  • News
  • சென்னை பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு ரூ3477 கோடி காஞ்சிபுரத்தில் மண் பரிசோதனை துவக்கம்

சென்னை பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு ரூ3477 கோடி காஞ்சிபுரத்தில் மண் பரிசோதனை துவக்கம்

சென்னை  பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு ரூ3477 கோடி காஞ்சிபுரத்தில் மண் பரிசோதனை துவக்கம்

வாலாஜாபாத்-சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைப்பதற்காக, மண் பரிசோதனை செய்யும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கியுள்ளனர்.

இதற்காக, 3,477 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து, அண்டை மாநில மான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.கருத்து கேட்புபயண நேரத்தை குறைக்கும் விதமாக, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம். இந்த சாலை அமைப்பதற்காக, 2012ல் சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராம மக்களிடம், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் கருத்து கேட்கப்பட்டது.அடுத்த கட்டமாக, 2016ல் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நிலங்களை அளவீடு செய்தனர். அதன்படி, 90 மீட்டர் அகலம், 264 கி.மீ., நீளம் என அளவிட்டனர்; 5,917 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளனர்.அதிவிரைவு சாலைக்காக, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

2024ல் முடியும்கட்டுமான பணிகளை துவக்குவதற்கு, ஆங்காங்கே மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் காஞ்சிபுரத்தில் தற்போது செய்து வருகின்றனர்.மண் மாதிரிகளின் முடிவுகள் வந்த பின், கட்டுமான பணிகள் துவக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.கோவிந்தவாடி ஏரிக்கரை ஓரம், ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி உள்ளிட்ட இடங்களில், மேம்பாலங்கள் அமையவுள்ளன.தேசிய நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிக்கு, பிரதான கடவுப்பாதைகள், ஏரி, குளம், ஆறுகள் ஆகிய பகுதிகளில், மேம்பாலங்கள் அமைய உள்ளன.இதுபோன்ற இடங்களில், மண் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மண் கூராய்வு முடிவுக்கு பின், சாலை அமைக்கும் கட்டுமான பணிகள் துவக்கப்படும். இந்த பணிகள், 2024க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை அளவுநான்கு வழிச்சாலையாக அமைகிறது. தலா 11 மீட்டர் என, இருபுறமும் 22 மீட்டர் அகலம்; 262 கி.மீ., துாரம் சாலை அமைகிறது.ஆக்கிரமிக்கக் கூடாதுசென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு சாலைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தி நிலம் அளவீடு செய்து, அடையாள கற்கள் நடப்பட்டுள்ளன. நில உரிமை விவசாயிகளுக்கு, உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.நிலத்தின் உரிமையாளர்கள் பலர், அரசிற்கு வழங்கிய நிலத்தில், விவசாயம் செய்து வருகின்றனர்.

இதை ஆக்கிரமிப்பு செய்து, யாரும் சாகுபடி செய்யக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கோவிந்தவாடியில் பஸ் நிலையம்சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலையில், காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் ஆகிய பிரதான நகரங்களுக்கு வாகன போக்குவரத்து வசதிக்கு, கோவிந்தவாடி கிராமத்தில் பஸ் நிலையம் அமைகிறது. இதற்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தி உள்ளது. சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலையில், முதல் பஸ் நிலையம் என, சிறப்பு பெற உள்ளது. மேலும், அதே பகுதியில் சுங்கச்சாவடியும் அமையவிருக்கிறது.

Publisher Name: Dinamalar

.

// any question you have //

+91 93606 93606