News

  • Home
  • News
  • Test Run at Kilambakkam Bus Station Successful

Test Run at Kilambakkam Bus Station Successful

Test Run at Kilambakkam Bus Station Successful

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சோதனை ஓட்டம் வெற்றி…

Publisher Name: Dinamalar Dated on 13-12-2023

சென்னை: வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய புறநகர் பேருந்து நிலையத்தில், 75 பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 40 ஏக்கரில், 390 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. பிரதான கட்டுமான பணிகள் முடிந்தாலும், இணைப்பு சாலைகள், வடிகால் பணிகளால் திறப்பு விழா தாமதமானது.

இந்நிலையில், இணைப்பு சாலைகள், மழை நீர் வடிகால் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி, சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள், அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.அரசு போக்குவரத்து கழக பேரந்துகள், 40; மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், 25; ஆம்னி பேருந்துகள்10 என மொத்தம், 75 பேருந்துகள் வரவழைக்கபட்டன.

ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து பேருந்து நிலையத்தில் நடை மேடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பேருந்துகள் அங்கு சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.இதன் பின், அயஞ்சேரி - மீனாட்சிபுரம் வழியாக ஊரப்பாக்கம் சந்திப்பில் ஜி.எஸ்.டி., சாலை வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. சோதனை ஓட்டம் சுமூகமாக இருந்ததாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, மார்கழி மாதம் துவங்குவதற்குள் திறக்க வேண்டும் என சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் விரும்பினர். இதற்காக, டிச., 10 அல்லது, 15 ஆகிய தேதிகள் தேர்வு செய்ப்பட்டன.இதற்காக, டிச., 2ல் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

மழை எச்சரிக்கையால், தள்ளி வைக்கப்பட்ட சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. 'மிக்ஜாம்' புயல் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக, முதல்வரின் தேதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மார்கழி மாதம் முடிந்த பின் ஜன., 15க்கு பின் திறப்பு விழாவை நடத்தலாமா என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் நிலைப்பாடு காரணமாக, 2024 பொங்கல் பண்டிகையின் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

// any question you have //

+91 93606 93606